செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டிருந்தால் உரிமம் ரத்து: உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டிருந்தால் உரிமம் ரத்து: உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

சட்டவிரோதமாக செயற்கை அருவிகள் உருவாக்கப்பட்டிருந்தால் குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று செயற்கை நீர்வீழ்ச்சிகள் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென்காசியில் செயற்கை அருவிகள் அமைத்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரிய வழக்கில் நடவடிக்கை எடுக்குமாறு வழக்கு போடப்பட்டிருந்தது. இதில் உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, செயற்கை நீர்வீழ்ச்சிகள் குறித்த வழக்கில், மூன்று பேர் கொண்ட குழு அரசுக்கு 3 மாதங்களில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளது.

அருவிகளில் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், வணிக நோக்கில் செயல்பட்ட ரிசார்ட் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவுவிட்டுள்ளது. மேலும், குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு துணைபோன அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in