நெல்லையிலிருந்து ராமநாதபுரத்துக்கு பணி மாற்றம்: விபரீத முடிவெடுத்த கனரா வங்கி மேலாளர்

நெல்லையிலிருந்து ராமநாதபுரத்துக்கு பணி மாற்றம்: விபரீத முடிவெடுத்த கனரா வங்கி மேலாளர்

திருநெல்வேலியில் கனரா வங்கியின் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பணியிட மாற்றத்தால் தற்கொலை செய்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

திருநெல்வேலி ஆயுதப்படை வளாகம் செயிண்ட் பால்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்(52). இவர் நெல்லை மாவட்டம், மூலக்கரைப்பட்டியில் உள்ள கனரா வங்கியில் மேலாளராக பணியாற்றிவந்தார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மாரியம்மாள் மூன்றடைப்பில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். முருகேசன் சிலநாள்களுக்கு முன்பு, ராமநாதபுரம் மாவட்டம், முதுகளத்தூர் வங்கிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் அங்கு செல்லாமல் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிலேயே இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார் முருகேசன். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் முருகேசன் கடந்த சில தினங்களாகவே மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனாலே தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. போலீஸார் அந்த கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in