இறந்தவர் பெயரில் மின் இணைப்பு இருந்தால் ஆதாருடன் இணைக்க முடியுமா?

இறந்தவர் பெயரில் மின் இணைப்பு இருந்தால் ஆதாருடன் இணைக்க முடியுமா?

இறந்தவர் பெயரில் மின் இணைப்பு இருந்தால் ஆதாருடன் இணைக்க முடியுமா என்பது குறித்து மின்வாரியம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மின் நுகர்வோர் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலவச மின்சாரம், மானிய விலை மின்சாரம் என அனைத்து பயனர்களும் மின் இணைப்பு பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். மின்வாரிய அலுவலகங்களுக்கு சென்று நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசின் https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற அதிகாரப்பூர்வ இணையபக்கத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை எளிதில் இணைக்கலாம்.

இறந்தவர் பெயரில் மின் இணைப்பு இருந்தால் எப்படி ஆதார் எண்ணுடன் எப்படி இணைப்பது என்று பலருக்கு கேள்வி எழுந்துள்து. இறந்தவர் பெயரில் மின் இணைப்பு இருந்தாலும் பெயர் மாற்றம் செய்யாவிட்டாலும் ஆதார் எண்ணுடன் இணைக்க முடியும். இதற்கு புதிதாக யார் பெயரில் மின் இணைப்பு மாற்றம் செய்ய விரும்புகிறீர்களோ அவரது பெயரில் உள்ள ஆதார் எண்ணை இணைக்கலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கு தமிழகம் முழுவதும் டிச.31-ம் தேதி வரை அந்தந்த பகுதிகளில் உள்ள மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் மின் பயன்பாட்டு அட்டை, ஆதார் அட்டை கொண்டு சென்று இணைத்துக் கொள்ளலாம். மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் இந்த முகாம் பயன்படுத்தி மாற்றிக் கொள்ளலாம் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in