சாமி சிலை நெற்றியில் பொருத்தப்பட்ட கேமரா; பதறிய திருவண்ணாமலை பக்தர்கள்: நடந்தது என்ன?

சாமி சிலை நெற்றியில் பொருத்தப்பட்ட கேமரா; பதறிய திருவண்ணாமலை பக்தர்கள்: நடந்தது என்ன?

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள துவாரபாலகர் சிலையின் நெற்றியில் துளையிட்டு சிசிடிவி பொருத்தியதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை ண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 500க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அண்ணாமலையார் கோயில் தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரத்தில் உள்ள துவாரபாலகர் சிலையின் நெற்றியில் துளையிட்டு, கண்காணிப்பு கேமராவை கோயில் நிர்வாகம் பொருத்தியுள்ளது. இது பற்றிய தகவல் வெளியாகி பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, துவாரபாலகர் நெற்றியில் இருந்த கண்காணிப்பு கேமரா உடனடியாக அகற்றிய கோயில் நிர்வாகம், வேறு இடத்தில் மாற்றி பொருத்தியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in