ரூட்டை மாற்றிய கால்டாக்ஸி டிரைவர்; தட்டிக்கேட்ட பெண்ணிடம் அத்துமீறல்: போலீஸ் காட்டிய அதிரடி

ரூட்டை மாற்றிய கால்டாக்ஸி டிரைவர்; தட்டிக்கேட்ட பெண்ணிடம் அத்துமீறல்: போலீஸ் காட்டிய அதிரடி

சென்னையில் காரில் பயணித்த பெண்ணிடம் அத்துமீறிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டதோடு, கார் மற்றும் செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்த, 46 வயது பெண் ஒருவர் ஆவடி செல்வதற்காக கால்டாக்சி புக் செய்து பயணித்துள்ளார். அப்போது, ஓட்டுநர் ஆவடிக்கு செல்வதாக கூறி மாற்று வழியில் சென்றுள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த பெண், ஓட்டுநரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தனக்கு எல்லா வழியும் தெரியும் என கூறி அந்த பெண்ணிடம் தகராறு செய்ததோடு அத்துமீறி நடக்க முயன்றுள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நீலாங்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கால் டாக்சி ஓட்டுநரான திருவேற்காடு, சிவன் கோவில் தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் தரக்குறைவாக பேசியது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீஸார் அவரின் கார் மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in