தமிழக முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: வீரர்களுக்கு அழைப்பு

தமிழக முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: வீரர்களுக்கு அழைப்பு

தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் வீரர், வீராங்கனைகள் ஜன.23 வரை பெயர் பதிவு  செய்யலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்ட விளையாட்டு மற்றும்இளைஞர் நலன் அலுவலர்கள் மூலம் வீரர், வீராங்கனைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொதுப் பிரிவு பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் பங்கேற்கும் விதமாக மாவட்ட அளவில் 42 வகை போட்டிகள், மண்டல அளவில் 8 வகை போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தப்படவுள்ளது.

12 முதல் 19 வயது, 15 முதல் 35 வயது, 17 முதல் 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் என 4 பிரிவுகளாக வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தள www.sdat.tn.gov.in முகவரியில் குழு போட்டி வீரர்கள், தனி நபர்கள் தங்கள் விவரங்களை ஜன. 23 மாலை 6 மணி வரை பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் பள்ளி, கல்லூரி, பொது பிரிவு (ஆண், பெண்) கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in