
எத்தனாலை சரியாக பயன்படுத்தினால் பெட்ரோலின் விலை 25 ரூபாய்க்கு கிடைக்கும் என மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, "எத்தனால் அடிப்படையிலான வாகனங்களை பயன்படுத்துவதால் பல நன்மைகள் இருப்பதாக தெரிவித்தார். மேலும், "எத்தனாலை சரியாக பயன்படுத்தினால் பெட்ரோல் விலை மிகவும் குறையும், அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் 25 ரூபாய்க்கு கிடைக்கும்" எனவும் தெரிவித்துள்ளார்.
"தற்போது உள்நாட்டு சந்தையில் அதிகபட்சமாக பெட்ரோல் ஒரு லிட்டர் 120 ரூபாயாக உள்ள நிலையில் 60 சதவீத மின்சாரம் மற்றும் 40% பயோ எத்தனால் கலவையால் எரிபொருள் செலவு வெகுவாக குறைக்க முடியும். அதனைப் போலவே எத்தனால் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபாடும் வெகுவாக குறையும். அதனால் இதற்கான திட்டங்கள் விரைவில் மத்திய அரசால் கொண்டு வரப்படும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் பரபரப்பு... பாஜக அலுவலகத்தைச் சூறையாடிய பிரபல ரவுடி!
செம மாஸ்... நடுரோட்டில் தெறிக்க விட்ட ரஜினி... வைரலாகும் வீடியோ!
பிரபல நடிகை சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவு! திரையுலகில் பரபரப்பு!
நாளை விண்ணில் பாய்கிறது 'ககன்யான்' சோதனை விண்கலன்... தொடங்கியது கவுண்டவுன்!
லெஸ்பியன்னு சொல்லு... கெத்தா இருக்கும்; சர்ச்சைக் கிளப்பும் ட்ரைலர்!