கரையில் கிடந்த துண்டு, சோப்: காணாமல் போன தொழிலதிபர் ஆற்றில் பிணமாக மீட்பு

கரையில் கிடந்த  துண்டு, சோப்: காணாமல் போன தொழிலதிபர் ஆற்றில் பிணமாக மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் ஆற்றில் குளிக்கச் சென்ற தொழிலதிபர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள மாராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட்(40). சொந்தமாக செங்கல் சூளை வைத்திருக்கும் இவர் எப்போதும் அப்பகுதியில் உள்ள ஆற்றில் குளித்துவிட்டு வீட்டிற்குச் செல்வது வழக்கம். நேற்று முன் தினம் அப்படி குளிக்கச் சென்றவர் அதன்பின்பு வீடு திரும்பவில்லை. இரவு வெகுநேரமாகியும் அவர் கரைதிரும்பாததால் வழக்கமாக டேவிட் குளிக்கும் ஆற்றிற்கு அவரது உறவினர்கள் தேடிச்சென்றனர். அங்கு அப்போது டேவிட்டின் துண்டு, சோப் ஆகியவை மட்டும் இருந்தன.

இதனால் டேவிட் தண்ணீரில் மூழ்கி இருக்கக்கூடும் என சந்தேகித்த அவரது உறவினர்கள் இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் நேற்று முழுவதும் தேடியும் டேவிட்டின் உடல் கிடைக்கவில்லை. தொடர்ந்து இன்று மீண்டும் தேடினர். இன்று டேவிட்டின் உடல் கிடைத்தது. டேவிட்டிற்கு குடிப்பழக்கமும் உண்டு. அதனால் குடிபோதையில் அவர் ஆற்றில் குளிக்கச் சென்று உயிர் இழந்திருக்கலாம் என்னும் கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in