39 பாதுகாப்புப் படையினரை ஏற்றிச்சென்ற பேருந்து: பிரேக் செயலிழந்ததால் ஆற்றில் கவிழ்ந்து விபத்து

39 பாதுகாப்புப் படையினரை ஏற்றிச்சென்ற பேருந்து: பிரேக் செயலிழந்ததால் ஆற்றில் கவிழ்ந்து விபத்து

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பிரேக் பிடிக்காத காரணத்தால் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 37 பேர் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த இருவர் உட்பட 39 பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது.

பாதுகாப்பு படையினர் 39 பேரை ஏற்றிச்சென்ற பேருந்து சந்தன்வாரியிலிருந்து பஹல்காம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அனந்த்நாக் மாவட்டத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது பிரேக் செயலிழந்ததால் ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆறு இந்தோ - திபெத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த வீரர்கள் விமானம் மூலம் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக காஷ்மீர் மண்டல காவல்துறை வெளியிட்டுள்ள ட்வீட்டில், "அனந்த்நாக் மாவட்டத்தில் சந்தன்வாரி பஹல்காம் அருகே நடந்த விபத்தில் 6 வீரர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் விமானம் மூலம் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரைப் பணியில் இருந்து பாதுகாப்புப் படை வீரர்கள் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in