கட்டுப்பாட்டை இழந்து டீ கடையில் புகுந்த பேருந்து... 15க்கும் மேற்பட்டோர் அட்மிட்: அம்பத்தூரில் நடந்த பயங்கரம்

கட்டுப்பாட்டை இழந்து டீ கடையில் புகுந்த பேருந்து... 15க்கும் மேற்பட்டோர் அட்மிட்: அம்பத்தூரில் நடந்த பயங்கரம்

அம்பத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து டீ கடைக்குள் புகுந்ததால் பதினைந்திற்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணியாற்றும் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு அத்திப்பட்டு வழியாகத் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்திலிருந்த டீ கடைக்குள் புகுந்தது. இதனால் டீ கடையின் தடுப்புச் சுவர், கூரை ஆகியவை டீ கடைக்குள் இருந்தவர்கள் மீது இடிந்து விழுந்தது. மேலும் பேருந்தின் முன்பக்கமும் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் டீ கடையில் பணியாற்றிய தம்பதியினர், பேருந்தில் பயணித்தவர்கள் என 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து விபத்து ஏற்படுத்திய பேருந்தின் ஆவணங்களை போலீஸார் பரிசோதனை செய்தனர். அப்போது அந்த பேருந்தின் தகுதிச் சான்று காலாவதியானது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பேருந்து உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in