புயல் காற்றால் கட்டிட மேற்பார்வையாளர் பலி: நெஞ்சில் கண்ணாடி கதவு மோதியதால் உயிரிழந்த சோகம்

புயல் காற்றால் கட்டிட மேற்பார்வையாளர் பலி: நெஞ்சில் கண்ணாடி கதவு மோதியதால் உயிரிழந்த சோகம்

சென்னையில் நேற்று இரவு 'மேன்டூஸ்' புயல் காரணமாக வீசிய பலத்த காற்றால் கண்ணாடி கதவு நெஞ்சில் மோதி கட்டிட மேற்பார்வையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் விஜயகுமார்(33). இவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் ஐ,டி கம்பெனி ஒன்றில் கட்டிட மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு புயல் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது.

அப்போது ஐ.டி கம்பனியில் உள்ள கண்ணாடி கதவு ஒன்று காற்றில் அடித்துக்கொண்டிருந்தது. அதை ஒடிச்சென்று விஜயகுமார், கதவை கையில் இறுக்கி பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீசிய பலத்த காற்றால் கண்ணாடி கதவு வேகமாக விஜயகுமார் நெஞ்சில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த சக ஊழியர் கண்ணதாசன் விரைந்து சென்று மயங்கி விழுந்த விஜயகுமாரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த விஜயகுமார் சில மணி நேரத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்த துரைப்பாக்கம் போலீஸார் அங்கு சென்று விஜயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விபத்து குறித்து துரைபாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சக ஊழியர்களிடம் விசாரணை நடத்தி் வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in