உயரும் பீடி, சிகரெட் விலை : புற்றுநோய் பாதிப்புகளை குறைக்குமா?

புகையிலை பொருளுக்கு கூடுதல் வரி விதிப்பு
புகையிலை பொருளுக்கு கூடுதல் வரி விதிப்பு

நடப்பு பட்ஜெட் அறிவிப்பில் புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பீடி, சிகரெட் விலை கணிசமாக உயர்வதன் மூலம், மக்கள் மத்தியில் புற்றுநோய் பாதிப்பின் தாக்கம் குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிவிப்பின் அங்கமாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகையிலை பொருட்களுக்கு 16% வரி விதிப்பினை அறிவித்துள்ளார். இந்த கூடுதல் வரி காரணமாக பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விலை கணிசமாக உயரும்.

புதிய விலை உயர்வு காரணமாக அவற்றை உபயோகிப்போர் எண்ணிக்கை கணிசமாக குறையவும் வாய்ப்பாகும். ஒட்டுமொத்தமாக இவை நாட்டில் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்பின் விகிதத்தையும் குறைப்பதில் எதிரொலிக்கும். இந்த வகையில் தற்போது அறிவிப்பாகி உள்ள நிதிநிலை அறிக்கையில் வரவேற்புக்குரிய அம்சமாக இது பார்க்கப்படுகிறது.

புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் உபயோகத்தை தடுக்க வரி விதிப்பில் தொடங்கி, சட்டம் ஒழுங்கு நடவடிக்கை வரை அரசு பலவகையிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இளம்வயது புகையிலைப் பொருள் மற்றும் போதைக்கு ஆட்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் மத்தியில், அவற்றில் விலை உயர்வு என்பது சமூக நலனுக்கு அனுகூலம் அளிக்கவே செய்யும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in