தங்கைக்காக தங்கள் உயிரை துச்சமாக கருதிய சகோதரர்கள்: ஆந்திராவில் நெகிழ்ச்சி சம்பவம்

தங்கைக்காக தங்கள் உயிரை துச்சமாக கருதிய சகோதரர்கள்: ஆந்திராவில் நெகிழ்ச்சி சம்பவம்

தேர்வு எழுதுவதற்காக தங்களுடைய சகோதரியை சகோதரர்கள் இருவர் தோளில் சுமந்து சென்று ஆற்றை கடந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம், விஜயநகரம் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருபவர் கலாவதி. இவர் அரசுப் பணிக்கு தேர்வு எழுத தயாரானார். இந்நிலையில், ஆந்திராவில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், அவர் வசிக்கும் ஊரை வெள்ளம் சூழ்ந்தது.

தேர்வு எழுத விசாகப்பட்டினத்திற்கு கலாவதி செல்ல இருந்தது. திடீர் மழையால் சம்பாதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தேர்வுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதை அறிந்த கலாவதியின் சகோதரர்கள், தங்களது உயிரை துச்சமாக கருதி சகோதரியை தங்கள் தோளில் சுமந்து பத்திரமாக வெள்ளத்தில் அழைத்து சென்று ஆற்றைக் கடக்க செய்தனர்.

பின்னர் அவர் தேர்வை நல்லபடியாக எழுதினார். தங்கள் சகோதரிக்காக சகோதரர்கள் தங்கள் உயிரை பணையம் வைத்த சம்பவம் ஆந்திராவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in