வாழ்த்து சொல்லாததால் வாட்ஸ்அப் பிளாக்: தம்பியை சமாதானம் செய்ய 424 மீட்டர் நீள சாதனைக் கடிதம் எழுதிய சகோதரி!

வாழ்த்து சொல்லாததால் வாட்ஸ்அப் பிளாக்: தம்பியை சமாதானம் செய்ய 424 மீட்டர் நீள சாதனைக் கடிதம் எழுதிய சகோதரி!
படம்: இந்து தமிழ் திசை

தம்பியின் கோபத்தைத் தணிப்பதற்காக அவரது சகோதரி 434 மீட்டர் நீளத்திற்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண பிரசாத். இவரது சகோதரி கிருஷ்ணபிரியா. சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணபிரியாவுக்கு திருமணம் முடிந்தது. அவர் தற்போது கணவரோடு முண்டகாயம் கிராமத்தின் வசித்துவருகிறார். கிருஷ்ண பிரியா, கேரள அரசில் பொறியாளராக பணிசெய்து வருகிறார்.

வழக்கமாகவே ஒவ்வொரு சகோதரர் தினத்தன்றும், தன் தம்பி கிருஷ்ண பிரசாத்துக்கு போனில் அழைத்து வாழ்த்துச் சொல்வதை கிருஷ்ண பிரியா வழக்கமாகவே வைத்திருந்தார். ஆனால் கடந்த 24-ம் தேதி சகோதரர் தினத்தன்று அலுவலக வேலையில் மறந்துபோனார். கிருஷ்ண பிரசாத் போன் செய்தபோதும் வேலைப்பழுவில் கிருஷ்ண ப்ரியா போனை எடுக்கவில்லை. இதனால் கோபமான கிருஷ்ண பிரசாத்,தன் சகோதரியின் வாட்ஸ் அப்பை பிளாக் செய்தார். இதன்மூலமே தம்பியின் கோபத்தை உணர்ந்த கிருஷ்ண பிரியா, தனது தம்பி கிருஷ்ண பிரசாத்தை சமாதானம் செய்ய நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். சுமார் 12 மணி நேரங்கள் எழுதிய அந்தக் கடிதம், இருவருக்கும் இடையேயான பாசம், அவர்களுக்கு இடையே நடந்த உரையாடல்கள், மகிழ்ச்சியான தருணங்கள் என அனைத்தையும் சுமந்து வந்தது.

அந்தக் கடிதம் 434 மீட்டர் நீளமும், 5 கிலோ எடையும் இருந்தது. இதைப் பார்த்த கிருஷ்ண பிரசாத் கல்கத்தாவில் உள்ள யுனிவர்சல் ரிக்கார்ட் போரம் அமைப்பிற்கு அனுப்ப, இந்த கடிதத்தை உலக சாதனை என அந்நிறுவனம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் இந்த கடிதம் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in