வெளிநாட்டிற்குப் புறப்பட்ட தம்பி; சென்னை விமான நிலையத்திற்கு வழியனுப்ப வந்த அக்காவிற்கு நேர்ந்த துயரம்!

வெளிநாட்டிற்குப் புறப்பட்ட தம்பி; சென்னை விமான நிலையத்திற்கு வழியனுப்ப வந்த அக்காவிற்கு நேர்ந்த துயரம்!

வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்லும் தம்பியை வழியனுப்ப விமான நிலையத்திற்குச் சென்ற அக்கா, விமானநிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கனகம்மா சத்திரத்தை சேர்ந்தவர் சுப்ரியா(35). இவருடைய தம்பி வெங்கட்ராஜேஷ். சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ள வெங்கட்ராஜேஷுக்கு பிரான்ஸ் நாட்டில் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து இன்று காலை ஏர்பிரான்ஸ் விமானத்தில் பாரீஸ் செல்வதற்காக, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெங்கட்ராஜேஷ் சென்றுள்ளார். தம்பியை வழியனுப்ப சுப்ரியா மற்றும் அவரது கணவர் கிரண் குமார் ஆகியோர் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

அப்போது சிறிது நேரம் விமானநிலைய போர்டிகோவில், தம்பியிடம் பேசிக் கொண்டிருந்தார். அதன் பிறகு விமானத்தில் ஏறுவதற்காக அக்காவை வழியனுப்பிவிட்டு விமான நிலையம் உள்ளே சென்றார் வெங்கட்ராஜேஷ். அப்போது சுப்ரியா திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த வெங்கட்ராஜேஷ் அவசரமாக வெளியில் ஓடி வந்தார். அங்கு இருந்த சக பயணிகள் உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். விமானநிலைய ஊழியர்கள் விரைந்து வந்து, விமானநிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சுப்ரியாவை எடுத்துச் சென்றனர். சுப்ரியாவின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், திடீர் மாரடைப்பு காரணமாக சுப்ரியா உயிரிழந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அக்கா உயிரிழந்த சோகத்தில் தம்பி வெங்கட் ராஜேஷ் கதறி அழுதது விமான நிலையத்தில் இருந்த பயணிகளை கண்கலங்க வைத்தது. இதையடுத்து தனது வெளிநாடு பயணத்தை வெங்கட்ராஜேஷ் ரத்து செய்துவிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in