சொத்தைப் பிரித்துக் கொடு: வாக்குவாதம் முற்றி அண்ணனை சுட்டுக்கொன்ற தம்பி

கைது செய்யப்பட்ட சந்திரன்
கைது செய்யப்பட்ட சந்திரன் சொத்தைப் பிரித்துக் கொடு: வாக்குவாதம் முற்றி அண்ணனை சுட்டுக்கொன்ற தம்பி

சொத்து தகராறில் அண்ணனை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த தம்பியை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.. இவரது தம்பி சந்திரன் வேலையின்றி வீட்டிலிருந்துள்ளார். அண்ணன், தம்பி இருவரிடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு அண்ணன் வெங்கடேசன் வேலைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனக்குச் சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுக்க வேண்டுமெனத் சந்திரன் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சந்திரன் வீட்டிலிருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து வந்து வெங்கடேசனைச் சுட்டுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து வெங்கடேசன் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்து சந்திரன் தப்பியோடியுள்ளார். அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து சந்திரனைத் தேடி வந்த நிலையில், திருக்கழுக்குன்றத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சந்திரனை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து தகராறில் அண்ணனைத் தம்பி சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in