கல்வியில் கவனம் செலுத்தாததால் ஆத்திரம்: தம்பியை அடித்தே கொன்ற அண்ணன்

ராஜ்மோகன் சேனாதிபதி
ராஜ்மோகன் சேனாதிபதி

கல்வியில் கவனம் செலுத்தாத தம்பியை அண்ணன் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் நயஹர்க் மாவட்டம் பாரமுன்டாவைச் சேர்ந்தவர் ராஜ்மோகன் சேனாதிபதி(21). இவர் பி.எட் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இவரது அண்ணன் பிஸ்வாமோகன்(25) எம்.பி.ஏ முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் ராஜ்மோகன் சேனாதிபதி படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால் அவரது அண்ணன் பிஸ்வாமோகனன் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இதே தொடர்பான பிரச்சினை நேற்று நள்ளிரவு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி அண்ணன், தம்பிக்குள் கைகலப்பு ஏற்பட்டது- அப்போது ராஜ்மோகன் சேனாதிபதியை அவரது அண்ணன் பிஸ்வாமோகன் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த ராஜ்மோகன் சேனாதிபதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், ராஜ்மோகனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், தம்பியைக் கொன்ற அண்ணன் பிஸ்வாமோகனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in