‘சரிபாதி பணியிடங்கள் பெண்களுக்கு’ -பிரிட்டானியா பெருமிதம்

பெண் பணியாளர் -சித்தரிப்புக்கானது
பெண் பணியாளர் -சித்தரிப்புக்கானது

அடுத்த ஆண்டுக்குள் தங்களது பணியாட்களில் 50% வரை பெண்களின் எண்ணிக்கையை உயர்த்தப்போவதாக பிரிட்டானியா நிறுவனம் அறிவித்துள்ளது. மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பும் கவனம் பெற்றுள்ளது.

ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணி வாய்ப்புகளுக்கு போட்டியிடுவதன் மத்தியில், அவர்களுக்கு நிறுவனங்கள் உரிய வாய்ப்புகளை வழங்குகின்றனவா என்பது கேள்விக்குறியே. ஆண்களுக்கு முன்னுரிமை வழங்குவதும், ஊதியத்தில் பாரபட்சம் காட்டுவதும் பரவலாக காணப்படுகிறது. இதற்கிடையே பிரபல உணவுப்பொருள் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனமான ’பிரிட்டானியா’, 2024 இறுதிக்குள் தங்கள் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை 50% என்றளவில் உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.

சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரிட்டானியா நிறுவனத்தில் தற்போது 41% என்றளவில் பெண் பணியாளார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக இந்த நிறுவனத்தின் மதுரை அலகில் 65% என்றளவுக்கு பெண் பணியாளர்கள் உள்ளனர். அதனை 70% என்பதாக உயர்த்தப்போவதாகவும் பிரிட்டானியா அறிவித்துள்ளது.

15 உற்பத்தி ஆலைகள் மற்றும் 35 ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக பிரிட்டானியா குடையின் கீழ் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in