மனு கொடுக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்தால்?: திண்டுக்கல் எஸ்.பி எச்சரிக்கை

திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரன்
திண்டுக்கல் எஸ்.பி பாஸ்கரன்மனு கொடுக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்தால்?: திண்டுக்கல் எஸ்.பி எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் கேன்களுடன் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அவர்களைச் சந்தித்து கொடுக்கப்படும் புகார் மனுக்களை முறையாக பெற்று, புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வரப்படுகிறது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மனு அளிக்க வரும் போது சிலர் மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் கேன்களை எடுத்து வந்து தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வதாக தெரிவித்து புகார் கொடுக்க வருகிறார்கள். இது போன்று வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல், நிலப்பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேன்களுடன் நேற்று வந்த 2 நபர்களின் மீது தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in