சொத்து தராத சோகத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை

சொத்து தராத சோகத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை

தன் தந்தையிடம் சொத்தைப் பிரித்துக் கேட்டு கொடுக்காத கோபத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், கீழக்குயில்குடியையைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டி. இவரது மகன் சூரிய பிரகாஷ்(22) இவருக்கும், சந்தியா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தின் கீழ உப்பிலிக்குண்டுவில் சவுந்தரபாண்டிக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன.

இதைத் தன் பெயருக்கு மாற்றித் தருமாறு சூரிய பிரகாஷ், தன் தந்தையிடம் கேட்டுவந்தார். இதனால் தந்தை, மகன் இடையே கருத்துமோதல் ஏற்பட்டது. இதனால் மன வருத்தம் அடைந்த சூரிய பிரகாஷ் கீழ உப்பிலிக்குண்டுவில் உள்ள தன் இல்லத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதுகுறித்து ஆவியூர் போலீஸார் வழக்குப்பதிந்து, சூரிய பிரகாஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். திருமணம் முடிந்து ஆறேமாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in