பொதுவெளியில் போலீஸாரின் லஞ்ச வீடியோ; பாய்ந்தது நடவடிக்கை!

பணியிடை நீக்கம்
பணியிடை நீக்கம்வாகன ஓட்டிகளிடம் லஞ்சம்; வெளியான வீடியோ, காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம்!

வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போக்குவரத்து காவல் உதவியாளர் உள்ளிட்ட இருவர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை திருமங்கலத்தில் போக்குவரத்து காவலர்கள் விதிகளை மீறி வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பதாக தொடர்ச்சியான புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் போக்குவரத்து போலீஸார் இருவர் லஞ்சம் வாங்கும்போது வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், திருமங்கலம் போக்குவரத்து போலீஸ் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர், ஏட்டு பாலாஜி ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள போலீஸ் பூத்தில் வைத்து வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து போக்குவரத்து போலீஸாரை வறுத்தெடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த வீடியோ போலீஸ் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கரிடம், இதுபற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதன் பேரில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர், ஏட்டு பாலாஜி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் இருவர் மீதும் துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in