காப்பகத்தில் இருந்து ஜார்கண்ட் சிறுவர்கள் தப்பியோட்டம்: போலீஸ் வலைவீச்சு!

டான்பாஸ்கோ அன்பு இல்லம்
டான்பாஸ்கோ அன்பு இல்லம்காப்பக ஜன்னல் கம்பியை வளைத்து தப்பி ஓடிய சிறுவர்கள்; போலீஸ் தேடல்!

சென்னை கொடுங்கையூர் டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் இருந்து, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் கழிவறை ஜன்னல் கம்பிகளை வளைத்து தப்பி ஓடியுள்ளனர்.

சென்னை கொடுங்கையூர் பகுதியில் டான் பாஸ்கோ அன்பு இல்லம் செயல்பட்டு வருகிறது இந்த இல்லத்தில் ஆதரவற்ற பிள்ளைகள் படித்து வருகின்றனர்.

வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக சென்னை சென்ட்ரல் வரக்கூடிய சிறுவர்கள் முறையான பயண சீட்டு இல்லாமல் இருந்தால், அவர்களை இந்த அன்பு இல்லத்தில் சேர்ப்பது வழக்கம். அந்த வகையில் வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் கடந்த 12ம் தேதி சேர்க்கப்பட்டனர்.

ஒரு வாரமாக அன்பு இல்லத்தில் இருந்தவர்கள், திடீரென்று அவர்கள் இருந்த அறையின் மேற்பகுதி ஜன்னல் கம்பியை வளைத்து, அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து டான் பாஸ்கோ அன்பு இல்ல நிர்வாகிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சிறுவர்கள் தப்பியோடிய சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in