
காதலியை காதலன் பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சம்பவம் பல்லடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தைச் சேர்ந்தவர் பூஜா. இவர் லோகேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் லோகேஷுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார் பூஜா. சம்பவத்தன்று பூஜாவை சந்திக்க சென்ற லோகேஷ் அப்போதும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த லோகேஷ், பூஜா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பூஜாவை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பூஜா இன்று உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காதலன் லோகேஸ்வரனை கைது செய்தனர். காதலி மீது பெட்ரோல் வைத்தபோது லோகேஷுக்கு கையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லோகேஷ் குணமடைந்த பின்னர் எதற்காக காதலி பூஜாவை பெட்ரோல் ஊற்றி கொன்றார் என்பது குறித்து காவல்துறையின் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.
காதலியை காதலனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொண்ட சம்பவம் பல்லடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.