காதல் மனைவிக்கு வேறு திருமணம்; தந்தை மீது கொடூர தாக்குதல்: வீடு புகுந்து தூக்கிச் சென்ற காதலன்

காதல் மனைவிக்கு வேறு திருமணம்; தந்தை மீது கொடூர தாக்குதல்: வீடு புகுந்து தூக்கிச் சென்ற காதலன்

காதல் மனைவிக்கு வேறு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்ததால் ஆவேசம் அடைந்த காதலன் வீடு புகுந்து தூக்கிச் சென்றதோடு, காதலியின் தந்தை மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

தெலங்கானா மாநிலம், ரெங்காரெட்டி மாவட்டம், அடிபட்லா கிராமத்தை சேர்ந்தவர் வைஷாலி (24). ஓய்வு பெற்ற ராணு வீரர் தாமோதர் ரெட்டியின் மகளான வைஷாலி, பல் மருத்துவரா உள்ளார். வைஷாலி வீட்டிற்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திடீரென வந்தனர். அவர்கள் அந்த வீட்டை அடித்து நொறுக்கியதோடு, வீட்டில் இருந்த வைஷாலியின் தந்தை மீது கொடூர தாக்குதல் நடத்தினர். பின்னர் வைஷாலியை இளைஞர்கள் காரில் கடத்திச் சென்றனர். இது குறித்து வைஷாலி தந்தை தாமோதர் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, கடத்திச் செல்லப்பட்ட வைஷாலிக்கும் நவீன் ரெட்டிக்கும் ஏற்கெனவே திருமணம் நடந்துள்ளது. ஆனால், வைஷாலியை அவரது தந்தை வலுக்கட்டமாக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த காதலன் நவீன் ரெட்டி, தனது நண்பர்கள் நூற்றுக்கணக்கானோரை அழைத்துக் கொண்டு காதல் மனைவி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணின் தந்தை தாக்கப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 16 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் இன்னொரு தகவலும் வெளியாகி இருக்கிறது. நவீன் ரெட்டிக்கும் பெண் வைஷாலிக்கும் சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டு இருவரும் பரிசு பொருள்களை பகிர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் நவீன் அந்த பெண் வைஷாலிக்கு கார் ஒன்றை பரிசாக தந்துள்ளார். தொடர்ந்து நவீன் வைஷாலியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாகவும், ஆனால் வைஷாலி அதற்கு சம்மதிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த பின்னணியில் தான் வைஷாலிக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிவான நிலையில் இந்த கடத்தல் செயலில் நவீன் இறங்கியதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in