பொறியியல் மாணவிகளை குறிவைத்த காதலி; கொடிகட்டிப்பறந்த பாலியல் தொழில்: மூளைச்சலவை செய்த காதலன்

பொறியியல் மாணவிகளை குறிவைத்த காதலி; கொடிகட்டிப்பறந்த பாலியல் தொழில்: மூளைச்சலவை செய்த காதலன்

பிரபல கல்லூரியில் காதலிக்கு பொறியியல் சீட்டு வாங்கிக் கொடுத்த காதலன், மாணவிகளை வலையில் சிக்க வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், மசாஜ் சென்டர் நடத்துவதாக கூறி ஆண்களை வரவைத்து அதிகளவு பணம் கேட்டு மிரட்டுவதாக பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்று வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து விபச்சாரத் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி ஜெயப்பிரதா என்ற கல்லூரி மாணவியை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். முதலில் காதலனை சந்திக்க வந்ததாக கூறி நாடகமாடிய ஜெயப்பிரதாவிடம் போலீஸார் நடத்திய கிடுக்குபிடு விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

குறிப்பாக அவரது செல்போன் மற்றும் ஜிபே போன்ற பணப்பரிவர்த்தனை செயலிகள், வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தபோது பல லட்ச ரூபாய் பணப்பரிவர்த்தனை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஜெயப்பிரதா பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது சமூக வலைதளம் மூலமாக பிரகாஷ் என்ற பாலியல் தரகரை காதலித்து உள்ளார். இந்தப் பாலியல் தொழிலில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என காதலன் ஆசை வார்த்தை காட்டியதால், 12-ம் வகுப்பு படித்த ஜெயப்பிரதா கல்லூரி மாணவிகளை குறிவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த சென்னையின் பிரபலமான பொறியியல் கல்லூரியில் சேர்ந்துள்ளார். இதற்கு காதலன் பிரகாஷ் பணம் கட்டி கல்லூரியில் படிக்க சீட்டும் வாங்கி கொடுத்துள்ளார்.

முதற்கட்டமாக சக மாணவிகளிடம் நட்பாக பழகி அவர்களது பணத் தேவையை வைத்து ஜெயப்பிரதா கடன் வழங்கி, பின்னர் அவர்கள் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாத நிலையில், கடன் வாங்கிய பெண்ணிற்கு மேலும் அதிகமாக பணம் கொடுத்து, இதுபோன்று அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது.

பெரும்பாலான தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் என பெங்களூரு, மும்பை, சென்னை போன்ற நகரங்களில் பாலியல் ஆசைக்காக கல்லூரி மாணவிகளை தேடுவதை அறிந்து கொண்டு பாலியல் தொழிலில் கல்லூரி மாணவிகளை ஈடுபடுத்தினால் வாழ்க்கை முழுவதும் தேவைப்படும் போதெல்லாம் பணம் கிடைக்கும் என்ற அடிப்படையில், பல பெண்களை நாசமாக்கியது தெரியவந்தது. இதற்காக சொகுசு வீடு, தங்கும் விடுதிகளை வாடகைக்கு எடுத்தும், Oyo ரூம்களை வாடகை எடுத்து கடந்த 3 வருடமாக போலீஸாரிடம் சிக்காமல் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் லோகாண்டோ இணையதளம் மற்றும் செயலி மூலம் விளம்பரப்படுத்தி காதலன் பிரகாஷ் மூலம் பொறியியல் மாணவி ஜெயப்பிரதா பாலியல் தொழிலை செய்ய ஆரம்பித்துள்ளார். இவ்வாறாக பாக்கெட் மணி, அதிக அளவு பணம், சுற்றுலா செல்வது, பெரிய மனிதர்களின் தொடர்பு என பல்வேறு விதமாக ஆசையில் விழுந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பலரை பாலியல் தொழிலில் பிரகாஷ்-ஜெயப்பிரதா ஜோடி ஈடுபடுத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இவர்கள் மூலம் பாலியல் தொழிலில் சிக்கிய பலரது தகவல்கள் ஜெயப்பிரதா செல்போன் அழைப்புகள் ஆய்வு செய்ததன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். ஓலா, உபர் போன்ற தொழில் போல் நெட்வொர்க் அமைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதும், குறிப்பாக நான்கு சக்கர வாகனங்கள் ஆட்டோக்கள், ஓலா, உபர் போன்ற நிறுவனங்களிடம் அட்டகாசம் செய்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு வாகனம் ஓட்டி பணம் சம்பாதித்துள்ளனர். அதற்கான கமிஷன் தொகையை ஓலா,உபர் நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டு வாகன ஓட்டுநர்கள் சம்பாதித்துள்ளனர்.

பாக்கெட் மணிக்காகவும் படிக்கும் காலத்தில் உல்லாசமாக இருக்கலாம் என வரும் மாணவிகளை பெரும் தொழிலதிபர்களுக்கு பாலியல் இச்சைக்கு ஈடுபடுத்தி, அதில் வரும் 30 முதல் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை ஜிபே மூலம் வாங்கிக் கொண்டு, வெறும் 3000 ரூபாய் சொற்ப அளவு பணத்தை கொடுத்து பாலியல் தரகர் காதல் ஜோடி மோசடி செய்வதும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் காதலி ஜெயப்பிரதா மற்றும் காதலன் பிரகாஷின் கூட்டாளி பிரேம்தாஸ் இருவரை மட்டும் விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். முக்கிய தரகரான காதலன் பிரகாஷை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in