நம்பி தனியாக சென்றார்; பாலியல் வன்கொடுமை செய்து காதலி கொன்று புதைப்பு: திருமணத்துக்கு மறுத்ததால் காதலன் வெறிச்செயல்

நம்பி தனியாக சென்றார்; பாலியல் வன்கொடுமை செய்து காதலி கொன்று புதைப்பு: திருமணத்துக்கு மறுத்ததால் காதலன் வெறிச்செயல்

5 ஆண்டுகளாக காதலித்து வந்த இளம்பெண் திடீரென காதலனை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த காதலன், காதலியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டம் மானாஜிபேட்டையை சேர்ந்தவர் சாய் ப்ரியா. கல்லூரி மாணவியான இவரும், அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீசைலம் என்ற இளைஞரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு சாய் ப்ரியாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், தனது காதலி சாய் ப்ரியாவை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற ஸ்ரீசைலன் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு சாய் ப்ரியா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆவேசம் அடைந்த ஸ்ரீசைலம், காதலியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் துப்பட்டாவால் காதலியை கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இதையடுத்து, சிவா என்ற உறவினரின் உதவியுடன் காதலியின் சடலத்தை கால்வாயில் புதைத்துள்ளார். இது குறித்து சாய் ப்ரியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் ஸ்ரீசைலனை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது, காதலியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து புதைத்துவிட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருந்த ஸ்ரீசைலத்தின் உறவினர் சிவாவையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருமணம் செய்ய மறுத்த காதலியை வன்கொடுமை செய்து காதலன் கொலை செய்த சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in