லிவ் இன் உறவில் வாழ்ந்த காதலி கொலை; தோழிக்கு பாலியல் டார்ச்சர்: ரோமியோ காதலனின் கொடூரச் செயல்

லிவ் இன் உறவில் வாழ்ந்த காதலி கொலை; தோழிக்கு பாலியல் டார்ச்சர்: ரோமியோ காதலனின் கொடூரச் செயல்

காதலியின் தோழிக்கு தொடர்ந்து பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்த ரோமியோ காதலை தட்டிக்கேட்ட காதலி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

நேபாளத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் தமி. இவர் கடந்த 3 வருடங்களாக பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள குடி என்ற பகுதியில் ஸ்ஃபா வேலை செய்து வருகிறார். இவருக்கும் ராமமூர்த்தி நகரில் ஸ்ஃபாவில் வேலை பார்த்து வந்த நேபாளத்தை சேர்ந்த கிருஷ்ண குமாரி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது. இதையடுத்து இருவரும் ஒன்று சேர்ந்து பரமாவு என்ற பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வந்து லிவி இன் முறையில் வசித்து வந்துள்ளனர். அதே நேரத்தில் காதலன் சந்தோஷ் ரோமியோ போல் இருந்து வந்துள்ளார்.

தனக்கொரு காதலி இருக்கும் நிலையில் மற்ற பெண்களிடம் சந்தோஷ் தொடர்பு வைத்துள்ளார். இந்த நிலையில் தனது காதலி கிருஷ்ணகுமாரியின் தோழியிடம் தனது பாலியல் வன்மத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் சந்தோஷ் தமி. அடிக்கடி அந்த பெண்ணிற்கு தனது செல்போனில் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். அதே நேரத்தில் தனது தோழியின் காதலன் இப்படி செய்வதை மற்றவர்களிடம் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார் காதலியின் தோழி. இதனிடையே, கிருஷ்ணகுமாரியுடன் தோழி இருக்கும்போது காதலன் சந்தோஷ் தமி அவரது செல்போனுக்கு வீடியோ கால் செய்துள்ளார்.

அப்போது தனது தோழியிடம், என்னுடைய காதலன் ஏன் உனக்கு வீடியோ கால் செய்கிறான் என்று கிருஷ்ணகுமாரி கேட்டுள்ளார். இதன் பின்னர் நடந்ததை அப்படியே சொல்லிவிட்டார் தோழி. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமாரி காதலனிடம் தகராறு செய்துள்ளார். இந்த நிலையில், கிருஷ்ணகுமாரியின் செல்போனை சோதித்துள்ளார் தோழி. அப்போது, கிருஷ்ணகுமாரி காதலனால் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தோழி, தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு கிருஷ்ணகுமாரி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்துள்ளார். அங்கு போதையில் இருந்த காதலன் சந்தோஷ் தமி, தனது காதலியை வேறு ஒருவரிடம் தொடர்பு இருந்ததால் அடித்ததாக கூறியிருக்கிறார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணகுமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தோழி கொடுத்த புகாரின் பேரில் சந்தோஷ் தமியை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கிருஷ்ணகுமாரி மற்றும் சந்தோஷ் தமியின் நண்பர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லிவி இன் உறவில் இருந்த காதலியை காதலன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெங்களூரு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in