கொத்திய பாம்பைப் பிடித்து 2 துண்டுகளாக கடித்துத் துப்பிய சிறுவன்: பதற வைக்கும் சம்பவம்

கொத்திய பாம்பைப் பிடித்து 2 துண்டுகளாக கடித்துத் துப்பிய சிறுவன்: பதற வைக்கும் சம்பவம்

தன்னைக் கடித்த பாம்பைப் பிடித்து பற்களால் கடித்து இரண்டு துண்டாக்கிய சிறுவனின் செயலால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம், ஜஷ்பூர் மாவட்டம் 'நாக்லோக்' என்று அழைக்கப்படுகிறது. பழங்குடி மக்கள் நிறைந்த வனப்பகுதியில் ஏராளமான பாம்புகள் உள்ளன. இப்பாம்புகள் பலரைக் கடித்துள்ளன. நேற்று அப்படி நடைபெற்ற ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

ஜஷ்பூர் மாவட்டம் பந்த்ராபத் பகுதியைச் சேர்ந்தவர் பஹாரி கோர்வா. இவரது 15 வயது மகன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள சகோதரி வீட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது அங்கு அவர் விளையாடிக் கொண்டிருந்த போது பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் இதனைக் கண்டு அஞ்சாத சிறுவன், அந்த பாம்பு ஓடுவதற்குள் பிடித்து பற்களால் கடித்து இரு துண்டுகளாக்கினார்.

இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் பயந்து போய், சிறுவனையும் அந்த பாம்பையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தன்னைக் கடித்த பாம்பை சிறுவன் கடித்தான் என்பதை அறிந்த மருத்துவர்கள் அதிச்சியடைந்தனர். உடனடியாக சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது அவர் பூரண நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பாம்பை சிறுவன் கடித்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in