பெண் குளிப்பதை வீடியோ எடுத்த சிறுவன்: செல்போனை ஆய்வு செய்த போலீஸாருக்கு அதிர்ச்சி

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த சிறுவன்: செல்போனை ஆய்வு செய்த போலீஸாருக்கு அதிர்ச்சி

மேட்டுப்பாளையம் அருகே பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 17 வயது சிறுவனை போலீஸார் கைது செய்தனர். அவரது செல்போனை ஆய்வு செய்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறையைச் சேர்ந்த 38 வயது பெண்ணுக்கு 2 மகன்கள் உள்னர். இந்நிலையில் சம்பத்தன்று அந்த பெண் வீட்டில் உள்ள குளியலறையில் குளிக்கச் சென்றார். அப்போது அவர் குளித்துக் கொண்டிருக்கும் போது குளியலறைக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்டுள்ளது.

இதனால் அந்த பெண் வெளியே போய் பார்த்த போது குளியலறைக்கு அருகில் இருந்து ஒரு வாலிபர் ஓடுவதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவரது கணவரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் இருவரும், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதுகுறித்த விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தான், பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த சிறுவனைப் பிடித்து செல்போனை போலீஸார் சோதனை செய்தனர். அதில் பல பெண்களை மோசமான முறையில் வீடியோ எடுத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதைக் கண்ட போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த சிறுவனை போலீஸார் நேற்று கைது செய்து சீர்த்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in