சப்-இன்ஸ்பெக்டர் பின்னால் சென்று கிண்டல்: ரீல்ஸ் எடுத்து வீடியோ வெளியிட்ட சிறுவனை தேடும் போலீஸ்

ரீல்ஸ் செய்யும் சிறுவன்
ரீல்ஸ் செய்யும் சிறுவன்

காவல்துறையைக் கிண்டல் செய்வது போன்று ரீல்ஸ் எடுத்த சிறுவன் குறித்து ராமநாதபுரம் சைபர் க்ரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீப காலமாக ரீல்ஸ் மற்றும் செல்ஃபி மோகங்கள் பலரது உயிருக்கே ஆபத்தாகிவிடும் நிலையில், சிலருக்கு குற்ற வழக்குகளையும் பரிசாகப் பெற்றுத் தருகிறது. காவல் நிலையம், காவல்நிலைய லாக்கப், காவல்துறை வாகனத்தின் முன்பாக என பல வகையில் இளசுகள் ரீல்ஸ் போட்டு லைக்குகளை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு மத்தியில் சிறுவன் ஒருவன் காவலர் பின்னால் சென்று காவல்துறையைக் கிண்டல் செய்வது போன்ற ரீல்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் கணேசன். இவர் ராமநாதபுரம் வண்டிக்காரத் தெரு பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிறுவன் ஒருவன் காவலர் கணேசன் பின்னாலே சென்றபடி கைகளை அசைத்துக்கொண்டு காவல்துறையினரை கிண்டல் செய்வது போல் ரீல்ஸ் எடுத்துள்ளார்.

மேலும், அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், இந்த வீடியோ ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ராமநாதபுரம் சைபர் க்ரைம் காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in