உறவினர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன்... நீரில் அடித்துச் சென்றதால் கதறல்: ஒருநாள் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு

உறவினர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன்... நீரில் அடித்துச் சென்றதால் கதறல்: ஒருநாள் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு

பெரியகுளம் பகுதியில் உறவினர்களுடன் குளிக்கச் சென்ற போது 13 வயது சிறுவன் ஆழத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் வேறொரு கால்வாயில் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள எண்டபுளிபுதுப்பட்டியைச் சேர்ந்த பிச்சைமணியின் மகன் கமலேஷ் (13). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை அணைப்பட்டியில் உள்ள வைகை அணை - பெரியாறு பிரதான நீர்பாசன கால்வாயில் தனது உறவினருடன் குளிக்கச் சென்றார்.

குளித்துக்கொண்டிருந்த போது, கமலேஷ் திடீரென ஆழமான பகுதிக்கு அடித்து செல்லப்பட்டார். அப்போது, காப்பாற்றுங்கள் என்று மாணவர் கமலேஷ் கதறியுள்ளார். உடனடியாக இதுகுறித்து, காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலக்கோட்டை தீயணைப்புத்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, கமலேஷின் உடல் நிலக்கோட்டையை அடுத்த அணைப்பட்டிக்கு அடித்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில், அங்கு சென்று இன்று காலை உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விளாம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in