பெற்றோரின் சண்டையால் பதறி வீட்டுக்குள் ஓடிய சிறுவன்: மின்சாரம் தாக்கி உயிரிழந்த பரிதாபம்!

சிறுவனின் வீடு
சிறுவனின் வீடு பெற்றோரின் சண்டையால் பதறி வீட்டுக்குள் ஓடிய சிறுவன்: மின்சாரம் தாக்கி உயிரிழந்த பரிதாபம்!

பெற்றோரின் சண்டையால் பயத்தில் வீட்டிற்குள் ஓடியபோது அறுந்து கிடந்த மின்வயரை மிதித்து  7 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் வாலாஜாபேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த தண்டலம் கிராமத்தில் வசிப்பவர்கள் துளசி, கஸ்தூரி தம்பதி. இவர்களுக்கு இரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில், துளசி அவ்வப்போது மது அருந்திவிட்டு வீட்டில் தனது மனைவியுடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவு அதுபோல தம்பதிகள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. 

இதனால் அச்சமடைந்த அவர்களது 7 வயது மகன் மணிகண்டன் திடீரென வீட்டிற்குள் ஓடிய போது, எதிர்பாராத விதமாக கீழே அறுந்து கிடந்த மின்சாரவயரை மிதித்துள்ளார். இதனால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுநதார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை போலீஸார்  வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இச்சம்பவம் குறித்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோரின் சண்டையால் பயந்து போன சிறுவன் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in