இரும்பு தடியால் தாக்கி சிறுவன் கொடூரக்கொலை: வழிமறித்துக் கொன்ற கும்பல் எஸ்கேப்

சிறுவன் கொலை
சிறுவன் கொலைஇரும்பு தடியால் தாக்கி சிறுவன் கொடூரக்கொலை: வழிமறித்துக் கொன்ற கும்பல் எஸ்கேப்

பால் வியாபாரம் முடிந்து வீடு திரும்பிய சிறுவனை இரும்பு தடி மற்றும் கம்புகளால் தாக்கி மர்மக்கும்பல் கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள திவாரிபூரைச் சேர்ந்தவர் சாஹர்(18, பெயர் மாற்றப்பட்டுள்ளது). 9-ம் வகுப்பு வரை படித்துள்ள அவர் தனது தந்தையுடன் சேர்ந்து பால் வியாபாரம் செய்து வந்தார்.

நேற்று இரவு பால் வியாபாரம் முடிந்து வீட்டிற்கு சாஹர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நிசாம்பூரில் ஒரு கும்பல் இரும்பு கம்பி மற்றும் தடிகளுடன் சாஹரை வழிமறித்து கொடூரமாக தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்து மயங்கி விழுந்தார். இதனால் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.

பால் வியாபாரத்திற்குச் சென்ற தனது மருமகன் சாஹர் வீடு திரும்பாததைக் கண்டு அவரது மாமா பரமேஷ்வர் யாதவ் இன்று காலைத் தேடிச்சென்றார். அப்போது நிசாம்பூரில் காயங்களுடன் கிடந்த சாஹரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தேரிவித்தனர்.

இதுதொடர்பாக திவாரிபூர் போலீஸாருக்கு பரமேஷ்வர் யாதவ் தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து சாஹர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தினர். முன்பகையால் இந்த கொலை நடந்ததா, பெண் விவகாரத்தில் நடந்ததா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பால் வியாபாரம் செய்த சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in