ஆட்டோவில் பெட்டி பெட்டியாக தங்கம்: வாகன சோதனையில் சென்னை போலீஸ் அதிர்ச்சி

கோப்பு படம்
கோப்பு படம்

சென்னையில் வாகன சோதனையின் போது 20 கிலோ தங்கத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்டதால் வருமானவரித்துறையிடம் தங்கம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை எழும்பூர் எல்.ஜி ரவுண்டான அருகே நேற்றிரவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த ஆட்டோவை தடுத்தி நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, பெட்டி பெட்டியாக 20 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. மேலும் தங்கத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தங்கத்தை பறிமுதல் செய்த போலீஸார் தங்கத்தை ஆட்டோவில் கடத்தி வந்த பரத்லால், ராகுல் ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் சவுகார்பேட்டையில் தங்கி அங்குள்ள கொரியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவது தெரியவந்தது.

தொடர் விசாரணையில் சூரத்தில் இருந்து தங்கத்தை வாங்கி அங்கிருந்து மும்பை சென்று பின் விமானம் மூலமாக சென்னை வந்து பின்னர் ஆட்டோவில் தங்கத்தை சவுகார்பேட்டைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை எழும்பூர் போலீஸார் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 20 கிலோ தங்கம் யாருக்கு சொந்தமானது? என்பது குறித்தும் பிடிபட்டுள்ள இரண்டு நபர்களும் தங்கத்தை எங்கிருந்து கொண்டு வந்தனர்? என்பது குறித்தும் எழும்பூர் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in