பூச்சிமருந்து கலந்த நீரைக்குடித்த எல்லைப் பாதுகாப்பு வீரர்: போதையால் பறிபோன உயிர்

இறப்பு
இறப்புOWNER

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிர குடிப்பழக்கத்தினால் எல்லைப் பாதுகாப்புப் படைவீரர் பூச்சி மருந்து கலந்த தண்ணீரைக் குடித்ததால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி அருகில் உள்ள அவரிவிளையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஐயப்ப கோபு(46). இவர் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணி செய்து வந்தார். கடந்த 4 -ம் தேதி எல்லைப் பாதுகாப்புப் பணியில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வந்தார். தீராத குடிப்பழக்கத்தில் சிக்கித் தவித்த ஐயப்ப கோபு, தினமும் குடிப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

இவரது வீட்டில் சில தென்னை மரங்களும் உள்ளது. அவற்றிற்கு தெளிக்க தண்ணீரில் பூச்சிகொல்லி மருந்து கலந்து வைத்திருந்தனர். குடிபோதையில் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் ஜயப்ப கோபு தவறுதலாக அதை எடுத்துக் குடித்துவிட்டார். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் ஐயப்ப கோபு வீட்டிற்குள்ளேயே மயங்கினார். அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

எல்லைப் பாதுகாப்பு வீரர் போதை மிகுதியால் இறந்த சம்பவம் அந்த சுற்றுவட்டாரப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in