இன்று முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம்: பாம்பன் மீனவர்கள் திடீர் போராட்டம்

இன்று முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம்: பாம்பன் மீனவர்கள் திடீர் போராட்டம்

ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீனவர்கள் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கடலுக்குச் செல்வதை புறக்கணித்து திடீர்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள்  மற்றும் 500-க்கும் மேற்பட்ட சிறு படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இது புரட்டாசி மாதம் என்பதால் தற்போது மீன்விலை  மிகவும் குறைந்திருக்கிறது.  இதனால் பிடித்து வரும் மீன்களை உரிய விலைக்கு  விற்க முடியாமல் மீனவர்கள் திண்டாடி வருகின்றனர்.  டீசல் செலவுக்கு கூட மீன்கள் விற்பனையாகவில்லை என்று மீனவர்கள் வருத்தப்படுகிறார்கள்.

அத்துடன் தொடர்ந்து பல நாட்களாக கடல் சீற்றமாக இருந்து வருகிறது.  இதனால் தொழிலுக்கு செல்வதில் அவர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் கடல் சீற்றம் மற்றும்  மீன்களின் விலை  சரிவு ஆகியவற்றின் காரணமாக நான்கு நாட்களுக்கு மீன் பிடிக்க செல்வதில்லை என்று பாம்பன் மீனவர்கள் முடிவெடுத்துள்ளனர்.  அதன் விளைவாக இன்று காலை பாம்பன் துறைமுகத்திலிருந்து  மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.  அதனால் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் சிறு படகுகள் அனைத்தும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in