ஸ்பைஸ் ஜெட் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு

ஸ்பைஸ் ஜெட் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புனே செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்திற்கு இன்று வந்த வெடிகுண்டு மிரட்டலால் தற்போது சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புனேவிற்கு இன்று இரவு ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்பட் தயாரானது. அப்போது டெல்லி போலீஸாரைத் தொடர்பு கொண்ட மர்மநபர், புனே செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து டெல்லி போலீஸார் உடனடியாக இந்திரா காந்தி விமான நிலைய போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து டெல்லியில் இருந்து புனே செல்ல இருந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறதா என சோதனை செய்யப்பட்டு வருவதாக டெல்லி போலீஸார் தெரிவித்தனர். ஆனால், இதுவரை சந்தேகத்திற்குரிய எந்த பொருளையும் கண்டறிய முடியவில்லை என்று தெரிவித்தனர்.

இதன் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்களும் டெல்லி போலீஸாருடன் இணைந்து வெடிகுண்டை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in