இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடிக்கும்: மிரட்டல் விடுத்த மதுரை வாலிபர் கைது

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடிக்கும்: மிரட்டல் விடுத்த மதுரை வாலிபர் கைது

கோவையில் இருந்து மதுரை வரும் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக வதந்தி பரப்பியவரை போலீஸார் கைது செய்தனர். 

கோவையில் இருந்து மதுரை வரும் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக வதந்தி கிளப்பியவரை போலீஸார் கைது செய்தனர். கோவை- மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன் தினம் மதியம் 2.30 மணிக்கு கிளம்பியது. இந்த ரயில் இரவு 7.30 மணிக்கு மதுரை வந்தடைகிறது. இந்த ரயிலில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக ரயில்வே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரை வந்த கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீஸார் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணர்கள் மூலம் சோதனை செய்து இல்லை என உறுதி செய்தனர்.

செல்போன் அழைப்பு மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீஸார் துரித விசாரணை மேற்கொண்டனர். மதுரை அருகே மேலூரை சேர்ந்த போஸ் (35) என தெரியவந்தது. அவரை போலீஸார் இன்று கைது செய்தனர். தொடர் விசாரணையில், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் அமர்ந்து பயணித்த அவர், சக பயணிகளுடன் ஏற்பட்ட தகராறால், அவர்களை மிரட்டுவதற்காக போலீஸ் அவசர அழைப்பு எண் மூலம் வதந்தி பரப்பியது தெரிய வந்தது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in