பஞ்சாப் ராணுவ மைதானத்தில் வெடிகுண்டு சிக்கியது - குடியரசு தின கொண்டாட்டத்திற்கு முன்பே அதிர்ச்சி

இந்திய ராணுவ வீரர்
இந்திய ராணுவ வீரர்கோப்புப் படம்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கன்னா நகரில் உள்ள ராணுவ மைதானத்தில் இருந்து வெடிகுண்டு குண்டு ஒன்று புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஹர்பால் சிங் தெரிவித்தார்.

வெடிகுண்டு சிக்கியது தொடர்பாக பேசிய டிஎஸ்பி ஹர்பால் சிங், " குடியரசு தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், லூதியானாவில் உள்ள கன்னாவின் ராணுவ மைதானத்தில் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை செயலிழக்க செய்ய ஜலந்தரில் இருந்து ஒரு குழு இங்கு வந்துள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றன" என்று கூறினார்

முன்னதாக ஜனவரி 3 ம் தேதி, பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பேசிய முதல்வரின் பாதுகாப்புத் தலைவரான பஞ்சாப் காவல்துறையின் கூடுதல் டைரக்டர் ஜெனரல் ஏ.கே. பாண்டே, “வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது குறித்து ராணுவத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். எந்த ஆபத்தும் இல்லை. ராஜிந்திரா பூங்காவில் உள்ள புதர்களில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடம் குப்பை வியாபாரிகளின் கடைகளுக்கு அருகில் இருக்கிறது. குண்டு கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து முதலமைச்சரின் குடியிருப்பு சுமார் இரண்டரை முதல் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது” என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in