சற்று நேரத்தில் இண்டிகோ விமானத்தில் குண்டு வெடிக்கும்; மிரட்டலால் பதறிய பயணிகள்: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

சற்று நேரத்தில் இண்டிகோ விமானத்தில் குண்டு வெடிக்கும்; மிரட்டலால் பதறிய பயணிகள்: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!
Nagendra/Patna/09835420005

சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட தயாராக இருந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் உள்ளூர், வெளிநாடு சென்று வருகின்றனர். ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை விமானத்தில் இருந்து துபாய்க்கு இன்று காலை 7.20 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 160 பயணிகள் இருந்தனர்.

இந்நிலையில், இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சற்று நேரத்தில் வெடிக்கப்போவதாகவும் சென்னை விமான நிலை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பில் மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள், புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்தை உடனடியாக தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து, காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் விமானத்தில் ஏறி சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இது புரளி என்று தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் நடத்தி விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரின் குடும்ப உறுப்பினர்கள் விமானத்தில் துபாய் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை தடுத்து நிறுத்தவே இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மிரட்டல் விடுத்த சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரஞ்சித் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டலால் சென்னையில் இருந்து துபாய்க்கு விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் அவதிப்பட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in