பாத்ரூம் சென்றாலும் பாடிகார்ட் பாதுகாப்பு: என்னாச்சு எலான் மஸ்க்?

ட்விட்டர் வளாகத்தில் பாதுகாவலர்களுடன் எலான் மஸ்க்
ட்விட்டர் வளாகத்தில் பாதுகாவலர்களுடன் எலான் மஸ்க்

ட்விட்டர் நிறுவனத்தின் வளாகத்தினுள், அதன் அதிபர் எலான் மஸ்க் பாடிகார்ட் உதவியுடன் உலவுவது பேசுபொருளாகி இருக்கிறது.

உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க், கடந்தாண்டு ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது முதலே ட்விட்டர் நிர்வாகம் களேபரமாகி இருக்கிறது. பொறுப்பேற்ற சூட்டில் அதிரடியாய் ட்விட்டர் ஊழியர்களின் எண்ணிக்கை பாதியாக குறைத்தார் எலான் மஸ்க். மிச்சமிருப்பவர்கள் தலைக்கு மேலும் கத்தி தொங்குவது போன்று, பணியிழப்பு அச்சத்துடனே பணியாற்றி வந்தனர்.

பணியிழந்த ஊழியர்களின் தூற்றல்கள், குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை பற்றி கவலைப்படாத எலான் மஸ்க், அண்மைக்காலமாக ட்விட்டர் நிறுவன வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் குறித்து கவலை அடைந்திருக்கிறார். பணி நீக்க நடைமுறைகளை எலான் மஸ்க் தொடர்ந்து வருவதும், பலபேர் பார்த்து வந்த பணி அழுத்தத்தை ஒருவர் தலையில் கட்டியதுமாக, தற்போதைய ஊழியர்கள் தவிப்புடனே பணியாற்றி வருகின்றனர்.

இதானால் ஊழியர்களில் எவரேனும், எப்போது வேண்டுமானாலும் எலான் மஸ்க் எதிராக திரும்ப நேரிடலாம் என்ற சுதாரிப்பு காரணமாக, பாதுகாவலர்கள் துணையுடனே அவர் உலவுகிறார். ட்விட்டர் நிறுவனத்துக்கு வெளியில் இருப்பதைவிட, உள்ளே எலான் மஸ்க் கூடுதல் பாதுகாப்புடன் உலவுவதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் ரெஸ்ட் ரூம் செல்லும்போது கூட பாடி கார்ட் துணை சூழ எலான் மஸ்க் புழங்குவது, ட்விட்டர் ஊழியர்களுக்கு ஆச்சரியம் தந்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in