கடற்கரையில் நள்ளிரவில் பற்றி எரிந்த படகுகள்: கடலூர் மீனவர்கள் அதிர்ச்சி

தீயில் எரிந்த  படகுகள்
தீயில் எரிந்த படகுகள் கடற்கரையில் நள்ளிரவில் பற்றி எரிந்த படகுகள்: கடலூர் மீனவர்கள் அதிர்ச்சி

கடலூர் அக்கரை கோரி மீனவ கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 8 பைபர் படகுகள்  மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் அருகேயுள்ள சிங்காரத்தோப்பு, சோனங்குப்பம், அக்கரைகோரி ஆகிய மீனவர் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் அக்கரைகோரி  கிராமத்தில் உள்ள சிறு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று வருவார்கள்.  மீன் பிடித்து வந்ததும் தங்கள் படகுகளை இங்கேயே விட்டுச் செல்வது அவர்களது வழக்கம்.

நேற்று  அப்படி மீன் பிடித்துவிட்டு திரும்பிய மீனவர்கள் வழக்கம் போல் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றனர். நேற்று நள்ளிரவு அக்கரைகோரி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் திடீரென்று எரியத்தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒவ்வொன்றிலும் தீ மளமளவென பரவியது. 

முற்றிலும் எரிந்த படகு
முற்றிலும் எரிந்த படகு

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஒத்துழைப்போடு நீண்ட நேரம் போராடி தெரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.  ஆனாலும் தீயில் அக்கரைகோரி கிராமத்தை சேர்ந்த ரஞ்சித், குப்புசாமி, அன்பு, மேகநாதன், பாலமுருகன், பவலேஷ், சாமிநாதன், மகேந்திரன் ஆகிய 8 பேரின் பைபர் படகுகள் மற்றும் வலைகள் எரிந்தது. 

இது பற்றிய தகவல் அறிந்த கடலூர் துறைமுகம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயில் எரிந்து நாசமான படகுகள் மற்றும் வலைகளை பார்வையிட்டு  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  பைபர் படகுகள் மற்றும் வலைகளுக்கு யாரேனும் தீ வைத்திருக்கிறார்களா?  முன்விரோதம் காரணமாக இது  நடந்திருக்கிறதா என்கிற கோணத்தில் விசாரணை செய்து விடுகிறார்கள்.

படகுகள் இப்படி மர்மமான முறையில்  திடீரென தீப்பற்றி எரிந்து வலைகள் உள்ளிட்டவை நாசம் அடைந்திருப்பதால் அப்பகுதி மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in