4 மீனவர்களுடன் கடலில் மூழ்கிய படகு: பதைபதைக்க வைக்கும் காட்சி வைரல்!

அலையில் சிக்கிய படகு.
அலையில் சிக்கிய படகு.4 மீனவர்களுடன் கடலில் மூழ்கிய படகு: பதைபதைக்க வைக்கும் காட்சி வைரல்!

திருவனந்தபுரம் அருகே மீன் பிடிக்கச் சென்ற படகு திடீரென கவிழ்ந்து நான்கு மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து விழும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. கனமழையோடு பலத்த காற்றும் வீசி வருகிறது. இதன் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேரளா அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், திருவனந்தபுரம் அருகே 4 மீனவர்கள் பைபர் படகில் மீன்பிடிப்பதற்காக நேற்று புறப்பட்டுச் சென்றனர். கடலில் அவர்கள் சிறிது தூரம் செல்லும் போதே கடல் அலையில் சிக்கி அவர்கள து படகு கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்த நான்கு மீனவர்களும் கடலில் தவறி விழுந்து தத்தளித்தனர். இதைப்பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் விரைந்து சென்று 4 மீனவர்களையும் மீட்டனர்.

கடல் சீற்றத்தில் சிக்கிய மீனவர்களின் பைபர் படகு சேதமடைந்தது. கடல் அலையில் சிக்கி மீனவர்களின் படகு கவிழும் காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in