விவேகானந்தர் நினைவு மண்டபம் போறீங்களா?: படகுசேவை நாளை தாமதமாகத் தொடங்க காரணம் இதுதான்!

விவேகானந்தர் நினைவு மண்டபம்
விவேகானந்தர் நினைவு மண்டபம்விவேகானந்தர் நினைவு மண்டபம் போறீங்களா?: படகுசேவை நாளை தாமதமாகத் தொடங்க காரணம் இதுதான்!

கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்வதற்கு நாளை மட்டும் தாமதமாக படகு சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி கடலின் நடுவில் உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு இல்லம் மற்றும் திருவள்ளுவர் சிலை உள்ளது. இங்கு செல்ல தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் குகன், பொதிகை, விவேகானந்தர் என மூன்று படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படகுகள் தினமும் காலை 8 மணிக்கு படகு தளத்தில் இருந்து புறப்படும்.

தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை என்பதால் கூட்டம் அதிகளவில் கன்னியாகுமரியில் முகாமிட்டு வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் நீண்டவரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தைப் பார்த்து வருகின்றனர். இதனிடையே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நடந்து வருகிறது.

இதன் மைய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடக்கிறது. காலை 8.30 மணிமுதல் 9 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுக்கப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளும் இதில் கலந்துகொள்ளும் விதத்திலும், பூம்புகார் கப்பல் கழக பணியாளர்கள் தரிசிக்கும் வகையிலும் நாளை ஒருநாள் மட்டும் 8 மணிக்குப் பதிலாக பத்து மணிக்கு விவேகானந்தர் நினைவு இல்லத்திற்கு படகுப் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in