
டெல்லியில் பெண்கள் தங்கியுள்ள 3 அடுக்குமாடி விடுதி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி பல்கலைக்கழகம் அருகே முகர்ஜி நகரில் சிக்னேச்சர் என்ற பெயரில் 3 மாடி கொண்ட பெண்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் ஏராளமான பெண்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு 7.45 மணியளவில் விடுதியில் திடீரென தீப்பற்றியது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 20 வாகனங்களைக் கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பெரும் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. விடுதியில் இருந்து 35 பெண்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். விசாரணையில் மின் மீட்டர் பலகையில் தீ பிடித்ததே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
அங்கு பற்றிய தீ மாடியில் உள்ள சமையலறை வரை பரவியது. சரியான நேரத்தில் தீயணைப்பு துறையினர் வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் முகர்ஜி நகர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.