மின்சாரம் தாக்கி பாஜக மகளிர் அணி செயலாளர் சாவு: கணவன் கண்முன் நடந்த துயரம்

மின்சாரம் தாக்கி பாஜக மகளிர் அணி செயலாளர் சாவு: கணவன் கண்முன் நடந்த துயரம்

சிங்கம்புணரி அருகே கணவர் கண் முன்பே பாஜக மாவட்ட மகளிர் அணிச்செயலாளர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலை மதகுபட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (45). இவரது மனைவி சபிதா (39). இவர் பாஜக சிவகங்கை மாவட்ட மகளிர் அணிச் செயலாளராக செயல்பட்டு வந்தார்.

பிரான்மலையில் ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான வயல் உள்ளது. இங்கு தற்போது விவசாயப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளைப் பார்வையிட ராமகிருஷ்ணன், சபிதா நேற்று சென்றிருந்தனர். இரவு 7 மணியளவில் மின்மோட்டாரை இயக்க சென்ற சபிதாவை மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து பதறிப்போன அவரது கணவர் ராமகிருஷ்ணன், சபிதாவை உடனடியாக சிகிச்சைக்காக சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு சபிதாவை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர். தகவலறிந்து மருத்துவமனை வந்த எஸ்.வி.மங்கலம் போலீஸார், சபிதாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in