பாஜகவும் விதிமீறலில் ஈடுபட்டுள்ளது; அக்கட்சிக்கு ரூ.4,600 கோடி அபராதம் விதிக்கவேண்டும்... காங்கிரஸ் புகார்!

காங்கிரஸ் பொருளாளர் அஜய் மக்கான்
காங்கிரஸ் பொருளாளர் அஜய் மக்கான்
Updated on
2 min read

பாஜகவும் ரூ.42 கோடி வரை வருமான வரி விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாகவும், அக்கட்சிக்கு ரூ.4,600 கோடி அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 2017-18 முதல் 2020-21 வரையிலான மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரி செலுத்தாதற்கான அபராதம், அதற்கான வட்டி ஆகியவை சேர்த்து ரூ.1,700 கோடி அளவுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், தேர்தல் நேரத்தில் வருமான வரித் துறை மூலம் எதிர்க்கட்சிகளின் பொருளாதாரத்தின் மீது ஆளும் பாஜக அரசு தாக்குதல் நடத்துவதாக கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, இதே அளவுகோலின்படி பார்த்தால் பாஜகவுக்கு ரூ.4,600 கோடி அபராதம் விதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

பாஜக, காங்கிரஸ்
பாஜக, காங்கிரஸ்

இது தொடர்பாக காங்கிரஸ் பொருளாளர் அஜய் மக்கான் கூறியதாவது: “வரி விதிப்பு சட்டங்களை பாஜக கடுமையாக மீறுகிறது. சீதாராம் கேஸரி காங்கிரஸ் தலைவராக இருந்த 1993-94ல் ஆண்டுகளில் மட்டும் ரூ.53 கோடி செலுத்த வேண்டும் என பாஜக கூறியுள்ளது. கடந்த 1993-1994 முதல் 2020ம் ஆண்டு வரை வரிக் கணக்குகளில் உள்ள முரண்பாடுகளுக்காக மொத்தம் 1,823 கோடி ரூபாய் வரி பாக்கி இருப்பதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை இரட்டை நிலைப்பாடை கொண்டுள்ளது. ரூ.14 லட்சம் விதிமீறலுக்காக எங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜகவின் ரூ.42 கோடி விதி மீறல் தொடர்பாக வருமான வரி அதிகாரிகள் முற்றிலும் மவுனமாக உள்ளனர்.

வருமான வரித்துறை
வருமான வரித்துறை

நாங்கள் விதிமீறலில் ஈடுபட்டதாக பாஜக பயன்படுத்திய அதே அளவுகோலைப் பயன்படுத்தி, ஆய்வு செய்ததில், பாஜகவுக்கு ரூ.4,600 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட வேண்டும். இந்த தொகையை செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை பாஜகவிடம் கேட்க வேண்டும்.

பாஜகவுக்கு நன்கொடை அளித்த 1,297 பேரின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. மொத்தம் ரூ.42 கோடி நன்கொடை அளித்தவர்களின் முகவரிகள் அல்லது சான்றுகள் எதுவும் இல்லை என்பது எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது விதிமுறைகளை அப்பட்டமாக மீறுவதைக் குறிக்கிறது. மேலும், 92 நபர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லை. ஆனால் அவர்கள் பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்களை வழங்கியுள்ளனர்.” இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in