விமான குத்தகை முறைகேடு விவகாரம்: மன்மோகன் சிங்கிடம் பாஜக மன்னிப்பு கேட்க சஞ்சய் ராவத் வலியுறுத்தல்

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

விமான குத்தகை முறைகேடு வழக்கு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என சிவசேனா (உத்தவ் தாக்கரே) தலைவர் சஞ்சய் ராவத் வலியுறுத்தியுள்ளார்.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் இணைப்புக்காக என்ஏசிஐஎல் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் விமானங்களை குத்தகைக்கு விடுவதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

மகாராஷ்டிராவில் தற்போது அஜித் பவார் தலைமையிலான என்சிபி கட்சியில் இருக்கும் பிரபுல் படேல், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னேற்றக் கூட்டணி (யுபிஏ) அசில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அப்போதுதான் விமான குத்தகை முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த குத்தகையின் விளைவாக தனியார் நிறுவனங்களுக்கு பண ஆதாயமும், அரசுக்கு இழப்பும் ஏற்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, விமான போக்குவரத்து துறையில் பெரும் ஊழல் நடந்ததாக பாஜக குற்றம் சாட்டியது. இந்நிலையில் பிரபுல் படேல் தற்போது அங்கம் வகிக்கும், அஜித் பவார் என்சிபி, மகாராஷ்டிரத்தில் தற்போது பாஜக கூட்டணியில் உள்ளது. இந்நிலையில், விமான குத்தகை முறைகேடு தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை என்பதால் வழக்கை முடித்துக் கொள்வதாக நீதிமன்றத்தில் சிபிஐ கடந்த வியாழக்கிழமை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் விமானப் போக்குவரத்துத் துறையில் ஊழல் நடந்ததாக பாஜக கூச்சலிட்டது. தற்போது முறைகேடு எதுவும் இல்லை என சிபிஐ வழக்கை முடித்துக் கொண்டுள்ளதால் பாஜக, டாக்டர் மன்மோகன் சிங்கிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...    

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in