மக்களவையில் அநாகரிகமாக பேசிய பாஜக எம்.பி...நோட்டீஸ் அனுப்பியது கட்சித் தலைமை!

ரமேஷ் பிதூரி
ரமேஷ் பிதூரி
Updated on
1 min read

மக்களவையில் அநாகரிகமாக பேசிய விவகாரத்தில் பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரிக்கு கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி தானிஷ் அலியை நோக்கி அநாகரிகமாக பேசியதாக பாஜக எம்.பி. மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையை உருவாக்கிய நிலையில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவின் பேரில் ரமேஷ் பிதூரியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மக்களவையில் சந்திரயான்-3 திட்டம் குறித்த விவாதத்தின் போது பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி தானிஷ் அலிக்கு எதிராக தெற்கு டெல்லியின் பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் கண்டனத்தை தொடர்ந்து ரமேஷ் பிதுரியின் இந்த கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

ரமேஷ் பிதூரி தானிஷ் அலி
ரமேஷ் பிதூரி தானிஷ் அலி

இதற்கிடையில், ரமேஷ் பிதுரி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா குறித்து பரிசீலிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி எம்பி தானிஷ் அலி கூறினார். இன்று முன்னதாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அவையில் ரமேஷ் பிதுரி தெரிவித்த ஆட்சேபகரமான கருத்துகளைக் கண்டித்து, எதிர்காலத்தில் இதுபோன்ற செயலை மீண்டும் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in