தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி: உ.பி பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு

பிரசாந்த் உம்ராவ்
பிரசாந்த் உம்ராவ்தமிழகத்தில் பிஹார் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி: உ.பி பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் புலம்பெயர்ந்த பிஹார் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்பியதற்காக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் பிரசாந்த் உம்ராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரப்பியதற்காக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நாளிதழின் ஆசிரியர் மற்றும் ஒரு நாளிதழின் உரிமையாளர் ஆகியோர் மீதும் தனித்தனியாக தமிழகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களை கைது செய்ய போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள பாஜகவின் உத்தர பிரதேச செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ், “ இந்தியில் பேசியதற்காக பிஹாரில் இருந்து புலம்பெயர்ந்த 12 தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்டனர். புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள் நடந்தபோதிலும், தேஜஸ்வி யாதவ் ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்” என்று அவர் ட்வீட் செய்திருந்தார, இது சர்ச்சையானதையடுத்து அந்த ட்வீட் நீக்கப்பட்டுள்ளது.

மாநிலம் மற்றும் மொழி அடிப்படையில் மக்களிடையே பகையை ஏற்படுத்தியதாக பிரசாந்த் உம்ராவ் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. பகைமையை பரப்பி கலவரத்தை தூண்டியதாக டைனிக் பாஸ்கர் மற்றும் தன்வீர் போஸ்ட் நாளிதழ்களின் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்தது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரால் பிஹாரைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை வட இந்தியத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலாக டைனிக் பாஸ்கர் வதந்தியாக பரப்பியதாக காவல்துறை கூறியது. கடந்த வாரத்தில், தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து வாட்ஸ்அப்பில் பல போலி செய்திகள் பகிரப்பட்டன. இது போன்ற செய்திகளுக்கு எதிராக தமிழ்நாடு மற்றும் பிஹார் மாநில அரசு கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in